[X] Close

தீபிகா படுகோனே திருமணத்திற்கு தேதி குறிப்பு? 

Dipika-Padukone-Wedding-Date-Announced

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் வரும் நவம்பரில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதல் வலையில் வீழ்ந்துள்ளதாக கிசுகிசு அடிப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியான ‘பத்மாவத்’ திரைபடத்தின் மூலம் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தீபிகா, ரன்வீர்சிங் இருவரும் இந்தாண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என தெரிய வருகிறது.


Advertisement

ரன்வீர்சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதுவராக இருக்கும் காரணத்தால், அங்குள்ள அரசாங்கம் அந்த நாட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் தீபிகாவுக்கு அதில் விருப்பம் இல்லை.  தென் இந்திய முறைப்படியே அவர்கள் தங்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தீபிகாவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ரன்வீர்சிங் மணப்பெண் பெயரை இதுவரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபிகா இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று தகவலும் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close