Published : 29,Jun 2018 02:21 AM
‘புதிய விதி’ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்

உலகக்கோப்பை கால்பந்தில் போலந்து அணியுடனான ஆட்டத்தில் தோல்வியடைந்த போதும் ஜப்பான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் நடைபெற்ற போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் போலந்து அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் ஜான் பெட்னரக் அடித்த கோல் போலந்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. நாக் அவுட் சுற்று வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட போலந்து அணிக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது. இந்தப்போட்டியின் முடிவையடுத்து ஹெச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையை எட்டின. கோல் விகித அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக விளையாடிதை கணக்கிடும் ஃபேர் ப்ளே (FAIR PLAY) விதியின் படி ஜப்பான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.