நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒன்றாக மது அருந்திய பின்னர் ஏற்பட்ட மோதலில் தாய்மாமனை, மருமகன் குத்தி கொலை செய்தார்.
ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் தனது மனைவியை பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டில் ஆனந்தகுமாரின் சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனந்தகுமார் மற்றும் அவரது சகோதரியின் மகன் கவின்குமார் ஆகியோர் ஒன்றாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஆனந்தகுமார் தனது சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டு தகாத முறையில் பேசியதாக தெரிகிறது.இதனால், ஆத்திரம் அடைந்த கவின், மாமா ஆனந்தகுமாரிடம் வாய்தகராறு செய்துள்ளார். இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.
கோபம் அடைந்த கவின் வீட்டில் இருந்த தோசை கரண்டியால் ஆனந்தகுமார் வயிற்றில், 7 முறை குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்த ஆனந்தகுமார் சம்ப இடத்திலேயே மரணமடைந்தார். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்தகுமாரின் உடலை மீட்டதோடு, கவின்குமாரை கைது செய்தனர். ராசிபுரம் டி.எஸ்.பி., ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாமாவையே சிறுவன் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!