Published : 25,Jun 2018 12:32 PM

கருணைக்கொலை செய்ய வேண்டி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

More-than-30-transgenders-Give-Petition-to-collector-in-Pudukottai

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரிடம் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இலவச பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. இதில் ஒன்றுதான் இலவச வீட்டு மனை பட்டா. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கி வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை மாவட்ட ஆட்சியர் வழங்கவில்லை என்று திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இது குறித்து பல முறை ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதால் அதிருப்தியடைந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அதிருப்தியடைந்த 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டாவை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து மனு அளித்தனர். இல்லையென்றால் தங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று மனுவில் தெரிவித்திருந்தனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்