[X] Close

“வசதியானவர்கள் வரதட்சணை கேட்க மாட்டார்களா?” - வறுத்தெடுத்த நீதிபதி

Wealthy-not-above-greed--all-have-fallen-prey-to-dowry-evil--Delhi-court

வரதட்சனை ஏழை, பணக்காரன் என எல்லா தரப்பினரும் இரையாகிவிட்டார்கள் என டெல்லி நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 


Advertisement

டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி சுனேனா ஷர்மா, “பணம் படைத்தவர்கள் எல்லோரும் பேராசைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூற முடியாது. தற்போது, சமுதாயத்தில் உள்ள எல்லா தரப்பினரும் வரதட்சணை கொடுமைக்கு இரையாகியுள்ளனர்” என்று வேதனையாக தெரிவித்தார்.

வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே 2005ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக சவர்லெட் ஆப்ட்ரா கார், தங்க நகைகள், ரூ.2.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை பெண்ணின் வீட்டார் கொடுத்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே மேலும் ரொக்க பணம், பெரிய கார் மற்றும் சில பொருட்கள் வரதட்சணையாக வேண்டும் என்று அந்தப் பெண்ணை கொடுமை படுத்தியுள்ளனர். பெண்ணி கணவர், மாமனார்-மாமியார், கணவனி சகோதரர் என எல்லோரும் சேர்ந்து கொடுமை படுத்தியுள்ளனர். கொடுமை தாங்க முடியாமல் அந்தப் பெண் 2007ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 


Advertisement

                     

நீதிமன்ற விசாரணையின் போது, “பெண் வீட்டாரை விட நாங்கள் அதிக வசதி படைத்தவர்கள். அவர்களிடம் இருந்து வரதட்சணை வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று கணவன் வீட்டார் கூறியுள்ளார். ஆனால், இந்தக் கருத்தை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். அதோடு நீதிபதி கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்ட குடும்பத்தினர் ஏற்கனவே ஆடம்பரமான கார் வைத்துள்ள நிலையில், புதிதாக ஸ்கோடா காரை வாங்கியுள்ளனர். திருமணத்தின் போது கொடுத்த காரின் பிராண்டில் அவர்களுக்கு திருப்தி இல்லை. அதனால், பெண் வீட்டாரை புதிய கார் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவர்களால் தர முடியாததால் ஸ்கோடா ரக காரை மறுவிற்பனை சந்தையில் வாங்கியுள்ளனர்” என்றார். 

மேலும், “தூக்கிலிட்டு கொண்ட பெண்ணின் உடலில் காயங்கள் இல்லை என்பதால் கொடுமை செய்யப்படவில்லை என்று அர்த்தம் ஆகாது. கண்ணத்தில் அறைவது, முடியை பிடித்து அடிப்பது மட்டுமல்ல, மனதளவில் கொடுக்கப்படுவதும் கொடுமைதான்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close