Published : 18,Jun 2018 02:26 PM
தனி ஒருவனாக பயிற்சி எடுக்கும் தல தோனி

இங்கிலாந்து தொடரையொட்டி பெங்களூரு மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தனியாக பயிற்சி எடுத்தார்.
இந்திய அணியில் இன்றும் தோனி நீடித்திருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு விளையாட்டு வீரருக்கே உரிய வகையில் தோனி தன்னுடைய பிட்னஸை இன்றளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 36 வயதான தோனியின் பிட்னஸுக்கு முன்னாள் இன்றையை இளம் வீரர்கள் கூட போட்டி போட முடியாது. இந்திய அணியில் தற்போது நல்ல உடற் தகுதியுடன் உள்ள இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா. ஆனால், அவரையே ஓட்டப்பந்தயத்தில் தோனி திணறடித்துவிட்டார். இருவரும் ரன்னிங் ஓடிய வீடியோ கடந்த ஆண்டு வைரலானது.
அதேபோல், களத்தில் இருக்கும் போது ஸ்டம்பிற்கு பின்னால் தோனி மின்னல் வேகத்தில் செயல்படுவார். அவரது ஸ்டம்பிங்கை பார்த்தாலே தெரியும். மேலும், ஸ்டம்பிற்கு அருகில் இருக்கும் பந்துகளை அவர் ஓடி எடுக்கும் போது அவரது பிட்னஸ் தெரியும். ஒருமுறை ஸ்டம்பிற்கு பின்னால் எல்லைக் கோட்டிற்கு அருகிலே ஓடி பந்தை தடுத்தது எல்லோரையும் வியக்க வைத்தது. அந்த அளவிற்கு தோனி பிட்னஸ்.
ஒரு சீனியர் வீரராக இருந்தாலும் இன்று தோனி தன்னுடைய பயிற்சியை விடாமல் மேற்கொண்டு வருகிறார். ஜூலை மாதம் முதல் வாரத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்தத் தொடரை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் இன்று தனியாக பயிற்சி எடுத்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் தோனிக்கு பந்து வீசினார். அதேபோல், பயிற்சியில் பந்து வீசுவதில் நிபுணராக ரகுவும் தோனிக்கு பந்து வீசினார். காலையில் மட்டும் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக தோனி பயிற்சி எடுத்தார். இடையில் ஷர்துல் தாக்கூருக்கும் சில ஆலோசனைகளை வழங்கினார். உணவு இடைவேளைக்கு பின்னர் சித்தார்த் கௌவுல் பந்து வீசினார்.
ஐபிஎல் தொடரில் தனது அதிரடியால் ரன்களை குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அம்பத்தி ராயுடு யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்தார். ஆனால், தோனி அசால்டாக அந்த டெஸ்டை கடந்து தற்போது பயிற்சிக்கே வந்துவிட்டார்.