[X] Close

தீபிகா படுகோனேவுக்கு டும் டும் டும்.....? 

Deepika-Padukone-gets-married-to-Ranveer-Singh-very-soon

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை தீபிகா படுகோனேவுக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.


Advertisement

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதல் வலையில் வீழ்ந்துள்ளதாக கிசுகிசு அடிப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியான ‘பத்மாவத்’ திரைபடத்தின் மூலம் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. 


Advertisement

இந்நிலையில் தீபிகா, ரன்வீர்சிங் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும், இந்தாண்டு நவம்பரில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் பரவி வருகிறது. தற்போது படப்பிடிப்புக்காக இருவரும் லண்டன் சென்றுள்ளனர். இந்நிலையில் தீபிகாவின் அம்மா மற்றும் சகோதரி ஆகியோர் திருமணத்துக்கு தேவையான பொருட்கள், நகைகள் ஆகியவற்றை பெங்களூருவில் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  பாலிவுட்டில் பரபரப்பாக உள்ள இருவரும் தங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என்றும், தென் இந்திய முறைப்படியே அவர்கள் தங்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் தீபிகாவிற்கு நெறுக்கமானவர்கள் கூறுகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close