ராஜஸ்தான் மாநிலத்தில் கடவுளை மகிழ்விப்பதற்காக எனக் கூறி தனது 4 வயது மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்தவர் நவாப் அலி. இவர் அப்பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு அலி தனது குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் உறங்கியுள்ளார். காலையில் பார்த்த போது அவர்களது 4 வயது மகள் ரிஷ்வானாவை காணவில்லை. குடும்பத்தினர் சிறுமியை அப்பகுதியில் தேடியுள்ளனர். வீட்டின் தரை தளத்தில் கழுத்தறுப்பட்ட நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என நவாப் அலி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நவாப் அலி முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.இதனால் அவரிடம் மேற்கொண்டு விசாராணை நடத்த திட்டமிட்டனர்.ஆனால் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வீட்டிற்குள் சென்று கதவுகளை தாழிட்டுக்கொண்டார். அதன்பின் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவே தன் மகளை கொன்று பலியிட்டதாக அவர் அளித்த வாக்குமூலத்தை கேட்ட காவல்துறையினர் அதிர்ந்து போயினர். இதையடுத்து குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வியாழக்கிழமை நவாப் தனது மகளை அழைத்துக்கொண்டு கடைவீதிக்கு இனிப்புகள் எல்லாம் வாங்கிக்கொடுத்துள்ளார். நள்ளிரவில் சிறுமியை படிக்கெட்டுகளுக்கு கீழ் தூக்கி வந்து கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்ததாக தெரிவித்தனர்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!