இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. அந்த அணியின் ஷேன் டோவ்ரிச் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும் லக்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்யப்பட்டது. அதிகப்பட்சமாக கேரன் பாவெல் 88 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் வெற்றிக்கு 453 ரன்களை இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத் துள்ளது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் கமகே ரன்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி வெற்றி பெற மேலும் 277 ரன்கள் தேவை. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்