Published : 01,Jun 2018 03:22 PM
வரலக்ஷ்மி வெளியிட்ட ‘தளபதி62’ போட்டோ

நடிகை வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தளபதி62’ சம்பந்தமான புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
‘துப்பாக்கி’, ‘கத்தி’படங்களுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி62’. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்தப் படத்தில் நடிகை வரலக்ஷ்மியும் சமீபத்தில் இணைந்தார். சமூக வலைத்தளத்தில் இப்படம் குறித்தக் காட்சிகள் லேசாக கசிந்து வந்தாலும் விஜய்யின் தோற்றமும் மற்ற கலைஞர்களின் தோற்றமும் என்ன என்பது பற்றி படக்குழு ரகசியம் காத்து வருகிறது.
இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். முருகதாஸ் சீன் போர்டை பிடித்துக் கொண்டு நிற்பதைபோல ஒரு படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “விஜய்யின் ‘தளபதி62’ல் இணைந்திருப்பது வாவ்.. எங்களுடைய தோற்றத்தை பகிர்ந்து கொள்ள முடியாது என்று ஆரம்பத்தில் இருந்தே இயக்குநர் முருகதாஸ் கண்டிப்பாக கூறிவிட்டார். அதனால் இவரது புகைப்படத்தை பகிர்ந்து கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.