Published : 08,Jan 2017 08:19 AM
கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசுக்கு உதவிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நன்றி....பிரதமர் மோடி

கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசுக்கு உதவிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டில் கறுப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலை ஒழிக்க அரசுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பில் அரசு முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறப்பாக பங்களித்து, ஆண்டுதோறும் சுமார் 6 ஆயிரத்து தொள்ளாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை தாய்நாட்டுக்காக அனுப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தொகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று கூறிய பிரதமர், எப்டிஐ (FDI) என்பதை அன்னிய நேரடி முதலீடு மட்டுமல்ல, பர்ஸ்ட் டெவலப்ட் இந்தியா (First Developed India) என்றும் கருதலாம் என தெரிவித்தார்.