[X] Close

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது: காங். முன்னிலை!

Congress-leads-in-Karnataka

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் படி காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. 

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close