[X] Close

ஜெயலலிதா நினைவிடத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

FM-Arun-Jaitly-pays-tribute-on-Jayalalithaa-Memorial

ஜெயலலிதா நினைவிடத்தில் நிதி நிலை அறிக்கையை வைத்து, அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், இன்று காலை 10.30 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்கிறார்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கும் இது முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டில் இருந்து காலை ஒன்பது மணிக்கு கிளம்பிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், நேராக மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்தார்.


Advertisement

அங்கு நிதி நிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று உழைத்தவர் ஜெயலலிதா. மக்கள் பயன்பெறும் வகையில் முன்னோடியான திட்டங்களை கொண்டு வந்தவர் அவர். மக்களுக்கான திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும்’ என்றார் ஜெயக்குமார்.


Advertisement

Advertisement
[X] Close