Published : 05,May 2018 01:39 AM

தப்பியது மும்பை இந்தியன்ஸ் !

Mumbai-Indians-beat-Kings-XI-Punjab-to-stay-alive-in-IPL

குர்ணால் பாண்டியா அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் வெற்றிப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்.

இதன் காரணமாக 6 புள்ளிகள் பெற்று, ஒரே மேட்சில் ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐ.பி.எல். தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை வெற்றிப் பெற்றால்தான், புள்ளிகள் பட்டியலில் நீடிக்க முடியும் என்பது மும்முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பரிதாபமான நிலை.

இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 
இறுதியாக, பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 50(40) ரன்களும், ஸ்டாய்னிஸ் 29 (15) ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணிக்கு 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், மும்பை இந்தியன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 57 (42) ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டாய்னிஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.  அடுத்து ஆட வந்த ஹர்திக் பாண்ட்யா 23( 13) ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குர்னால் பாண்ட்யா ஜோடிக்கு தங்களது அணியை வெற்றிப்பெற செய்ய 4 ஓவர்களில் 51 ரன்கள் தேவை என்ற நிலை. அப்போது அதிரடியாக ஆடிய குர்ணால் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார் அதில் 2 சிக்சர்கள் 4 பவுண்டர்களில், மறு முனையில் ரோகித் சர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் அதில் 2 சிக்சர்கள், 1 பவுண்டரி என அதிரடியாக விளையாடி 19 ஆவது ஓவரில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்