[X] Close

முதலமைச்சராகும் எண்ணமில்லை: டிடிவி தினகரன்

No-thinks-about-CM-Post--TTV-Dhinakaran

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் முதலமைச்சராகும் எண்ணமில்லை என அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, தேமுதிக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதால் பலமுனை போட்டி நிலவுகிறது. அதிமுக-வின் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் முதலமைச்சராகும் எண்ணமில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதால் போட்டியிடுவதாக தெரிவித்த அவர், எடப்பாடி பழனிச்சாமியே முதலமைச்சராக தொடர்வார் எனவும் தெரிவித்தார். மேலும் ஆர்.கே.நகரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close