Published : 28,Apr 2018 11:50 AM

சிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கு : முருகன் விடுவிப்பு

Rajiv-Gandhi-Murdered-Case-Murugan-released-from-used-cell-phone-in-Jail-Case

சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து ராஜீவ் கொலைக்குற்றவாளி முருகன் விடுவிக்கப்பட்டார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வேலூர் மத்தியசிறையிலுள்ள முருகன் அறையிலிருந்து 2 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், 1 சார்ஜர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக சிறைத்துறை வழக்கு தொடர்ந்தது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் தீர்ப்பளித்த, வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி முருகனை விடுவித்தார். செல்போன் வைத்திருந்த குற்றச்சாட்டின் காரணமாக சுமார் 3 மாத காலம் முருகன் தன் மனைவி நளினியை பார்க்க அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்