Published : 28,Apr 2018 11:30 AM

கோடை காலத்தில் வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்: தடுப்பது எப்படி? 

eyes-related-diseases--special-story

கோடை காலத்தில் பரவலாக வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் என்ன ? அதை எப்படி தடுப்பது ? வந்த பிறகு என்ன செய்வது? ஆலோசனைகளை தருகிறார் அப்போலோ மருத்துவர் டாக்டர் விஜய் சங்கர். 

“பொதுவாக சம்பர் வந்தால் குழந்தைகளுக்கு பெரிய சந்தோஷம். ஆனா சம்மர் கூடவே சில பிரச்னைகளும் வரும். அதிலும் கண்கள் சம்பந்தமாக பல பிரச்னைகள் வரும். அதற்கு காரணம் அதிக வெப்பம். பூவின் மகரந்தம் போல கண்களில் வரக்கூடும். ஆங்கிலத்தில் அதை pollen என்று சொல்லுவார்கள். அதைபோல ஆஸ்துமா அலர்ஜி இருப்பவர்களுக்கு சில கண் பாதிப்புக்கள் வரகூடும். வெப்பம், பொலியூஷன்  போன்றவைகளால் கண் பாதிப்பு ஏற்படும். வெயில் கால கண் அலர்ஜியால் கண்களில் அரிப்பு உருவாகும். தொடர்ந்து அரிப்பு, ஊரல் இருப்பதால் கண்கள் பாதிப்படையும். பிறகு அதிக சூட்டினால் கண்கள் சிவக்க நேரும். இந்த மாதிரியான பிரச்னைகள்தான் கோடைகாலத்தில் பரவலாக வர கூடிய கண் பிரச்னைகள். இதை தாண்டி கண்வலி, கண் கட்டி போன்றவைகளும் கோடைகாலத்தோடு சாம்பந்தப்பட்ட நோய்கள்.” தொடங்கும்போதே மிக எளிதாக புரிந்து கொள்ளும்படி விளக்க ஆரம்பிக்கிறார் பிரபல கண்மருத்துவர் விஜய் சங்கர்.

“வெயில் காலத்தில் மிகப் பரவலாக காணப்படும் பிரச்னை கண் நோய். இது ஒருவித நோய் தொற்றுவினால் வருகிறது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. இதைதான் conjunctivitis என்று சொல்கிறோம். இந்தத் தொற்று வந்தவர்கள்  நீச்சல் குளத்தில் நீந்தினால் அந்த வைரஸ் அப்படியே நீரில் பரவும். அதைக்கொண்டு அது அடுத்தவர்களுக்கும் பரவும். நீந்தும் போது வைரஸை தடுக்கக்கூடிய உபகரனங்களை பயன்படுத்துவதினால் இதை தடுக்க முடியும். கோடைக் காலத்தில் வெப்பத்தில் தாக்கம் அதிகமாக இருக்கும். சூரிய ஒளியில் இருந்து வெளிப்படக் கூடிய ultraviolet கதிர்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த ‘யுவி ரேஸ்’ கண்களை பாதிக்க கூடியது. ஆகவே pterygium பிரச்னைகள் வரலாம். கண்களில் சதை போன்று வளரக் கூடியதைதான் நாம் pterygium என்று சொல்கிறோம். கூடவே கேட்ராக்ட் வரலாம். கண்களில் பொறை வரலாம். அதிக வெயிலில் நடமாடுவதினால் ரெட்டினா சம்பந்தமான நரம்பு பிரச்னைகள் வரலாம். macular degeneration கூட வரலாம். இவை அனைத்தும் அல்ட்ரா வைலட்டினால் வரும் பிரச்னைகள்.”என்ற டாக்டர் விஜய் இந்த நோய்கள் சம்பந்தப்பட்ட படங்களை நாம் புரிந்து கொள்வதற்காக கூகுளில் தட்டிவிட்டு சில விளக்கங்களை கொடுத்தபடி தொடர்கிறார்.

“முக்கியமாக கண்களில் வரும் கிரிக்கட்டி. வெயில் காலத்தில் எல்லோரையும் பாதிக்க கூடிய இன்னொரு பிரச்னை இது. சிகப்பு சிறத்தில் இமையோரமாக இந்தக் கட்டிகள் தோன்றும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதை மீறி சில சாதாரணமான அலர்ஜி சம்பந்தமான கண் பிரச்னைகள் வருவது இயல்பு. நான் குறிப்பிட்ட பல நோய்கள் வெயில் காலத்தில் மட்டுமே தாக்ககூடியவை அல்ல. இதை வெயில் காலத்தில் அதிகம் தாக்க கூடிய நோய்கள் என்றே சொல்லலாம். பகல் முழுவதும் கடுமையான வெயிலில் அலைந்தால் இரவில் கண் எரிச்சல்கள் ஏற்படும். கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் மும்முரமாக வேலையில் மூழ்கி விடுவதால் அவர்கள் இமைகளை இமைப்பதையே மறந்து போகிறார்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடுகின்றன. வெப்பக் காலத்தில் இது அதிகம் ஏற்படும். அவர்கள் இரவில் லூப்ரிகேஷன் சொட்டு மருந்துகளை நிச்சயம் போட்டு கொள்ள வேண்டும். இந்தத் தலைமுறையினர் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகமாக தென்படுகிறது ”என்கிறார். பொதுவாக வெப்பக் காலத்தில் மத்திய வயதினர் மற்றும் வயது முதிர்ந்தோர் அதிகம் இந்த வியாதிகளால் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரத்தையும் சொல்கிறார் டாக்டர் விஜய் சங்கர்.  

வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை:

கண்களில் நாமக்கட்டி போடுவார்கள். சந்தனம் போடுவார்கள். இதை செய்யவே கூடாது. இதனால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும். முறைப்படி கண் மருத்துவரை பார்ப்பது நல்லது. அதே போல மெடிக்கல் ஷாப்களில்  இவர்கள் இஷ்டத்திற்கு மறுந்துகளை வாங்கி உட்கொள்ளவே கூடாது. இந்தப் பழக்கம் நம் நாட்டில் அதிகமாக இருக்கிறது. அதை நிச்சயம் மக்கள் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக விஷயம், வெயில்காலத்தில் நல்ல பிராண்ட் கூலிங் கிளாஸ்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். 
கண்களில் அரிப்பு, எரிச்சல், ஊரல் இருந்தால் அடிக்கடி அதை தேய்க்க கூடாது. இதனால் இமை, கண் சம்பந்தப்பட்ட நரம்புகள் பாதிக்கும். 
தினமும் குளிர்ந்த நீரில் கண்களை அலசுவது நல்லது. நீச்சல் குளத்தில் நீந்தும் போது கண்களுக்கு கண்ணாடி அணிய வேண்டும்.
கிரிக்கட்டிகள் வராமல் இருப்பதற்கு கண் ரப்பையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நல்ல பருத்தி துணிகளில் செய்யப்பட்ட கைக்குட்டையை பயன்படுத்து துடைப்பது நல்லது. 
கண்களை பேபி ஷாம்பூ போட்டு சுத்தம் செய்யலாம். நோய் எதிப்பு மருத்துகளான ‘ஆன்டிபயாடிக்’ சொட்டி மருந்துகளை ஆலோசனை பேரில் எடுத்து கொள்ள வேண்டும்.
கட்டி திரும்பத் திரும்ப வந்தால் மருத்துவரை அனுக வேண்டும். அவ்வாறு வருவது சர்க்கரை நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
# வெண்ணீர் ஒத்தடம் போல வெயில் காலங்களில் கண்களுக்கு குளிர்ந்த தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலம்.
# யு.வி ரேசை சமாளிக்க sollarasi கண்ணாடிகளை கட்டாயம் அணிய வேண்டும்.
# காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் தினமும் அதை சுத்தப்படுத்தி அணிய வேண்டும். 
# கண்வலி உள்ளவர்களிடம் கைகொடுப்பதை  நெருங்கிப் பழகுவதை அரவே தவிர்க்க வேண்டும். 
# ஒருவர் பயன்படுத்தும் சொட்டு மருந்துகளை மற்றவர்களும் பயன்படுத்த கூடாது.அடிக்கடி இமைகளை இமைக்க வேண்டும்

உட்கொள்ள வேண்டிய உணவுகள்:

# நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
# நிச்சயம் இளநீர் அருந்த வேண்டும்.
# கோடைகாலங்களில் எளிதாகக் கிடைக்க கூடிய, தர்பூசணி, ஆரஞ்ச், சாத்துக்குடி, திராட்சை, அனாசி பழம் போன்ற பழங்களை அதிகம் சாப்பிடலாம்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்