Published : 27,Apr 2018 05:37 AM

பெண்களை மறைந்திருந்து வீடியோ எடுத்த துணை நடிகர் கைது

The-sub-actor-is-arrested-for-Video-taken-by-a-women

சென்னையில் விடுதியில் தங்கியிருந்த பெண்களை மறைந்திருந்து வீடியோ எடுத்த துணை நடிகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பூ மகள் நகரிலுள்ள பெண்கள் விடுதியை ஒட்டி, அடுக்குமாடி குடியிருப்பில் வைரமூர்த்தி என்ற துணை நடிகர் வசித்து வந்துள்ளார். விடுதியிலுள்ள பெண்கள் வெளியே வரும்போது அவர்களை வீடியோ எடுப்பதை வைரமூர்த்தி வாடிக்கையாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாடியில் பெண்கள் நடமாடினால் அவர்களை வைரமூர்த்தி வீடியோ எடுப்பதாக விடுதியின் காப்பாளர் கிண்டி‌ காவல்நிலை‌யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கண்காணித்த காவல்துறையினர் பெண்களை வீடியோ எடுத்த வைரமூர்த்தியை கையும், களவுமாக பிடித்தனர். அவர் செல்போனையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட துணை நடிகர் வைரமூர்த்தி சென்னை 28 திரைப்படம் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். விசாரணைக்கு பின் வைரமூர்த்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.‌

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்