குட்கா ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில், குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில், சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரியிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளைக் காப்பாற்ற, ஊழல் கண்காணிப்பு ஆணையம் நினைப்பதாகவும் , எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருவதாக, மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் எந்தத் தொய்வும் இல்லை என்றும், மனுதாரரின் கோரிக்கை அடிப்படை ஆதரமற்றது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.
குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதையும் மீறி விற்கப்படும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதால், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் கடந்த ஜனவரி 30ம் தேதி மீண்டும் விசாரனைக்கு வந்தபோது தமிழக அரசு, மாநில உணவு பாதுகாப்பு ஆணையர், மனுதாரர் அன்பழகன் தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்