[X] Close

கனடா தாக்குதல்: பெண்கள் மீதான வெறுப்புணர்ச்சியால் கொலையா?

Canada-Van-Massacre-Driver-Charged-With-Murder--Most-Victims-Women

 


Advertisement

கனடாவில் வேனை ஏற்றி பாதசாரிகளை படுகொலை செய்வதற்கு முன், முகநூல் ‌பக்கத்‌தில் கொலையாளி ரகசிய தகவலை பதிவிட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தலைநகர் டொராண்டோவில் வேனை வேகமாக ஓட்டி வந்து நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அலெக் மின்னாசின் என்ற 25 வயது இளைஞர் நடத்திய இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இந்நிலையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக மின்னாசின் முகநூல் பக்கத்தில் ரகசிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் எலியாட் ரோட்ஜர் என்ற அமெரிக்கரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இவர் பெண்கள் மீதான வெறுப்புணர்ச்சி காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் காரை ஓட்டிச் சென்று 6 பெண்களை படுகொலை செய்தார். அவரை புகழ்ந்திருப்பதால், பெண்களால் மின்னாசினுக்கு கசப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன் காரணமாக இந்தத் தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றன‌ர். எனினும் தாக்கு‌‌தலுக்கான காரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close