[X] Close

சென்னையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்  தூக்கிட்டு தற்கொலை

Police-Special-Assistant-Inspector-in-Chennai-has-committed-suicide

சென்னை‌யில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை கொருக்குப்பே‌ட்டை காவல்நிலைய ‌சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜோசப். ‌54 வயதான ஜோசப், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காசிமேடு காவல்துறையினர், ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனு‌ப்பி வைத்தனர். பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சொந்த பிரச்னை காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அண்மைக்கால செய்தியாக மட்டுமல்லாமல், நீண்ட வருட தொடர்கதை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அடுத்து சென்னை அயனாவரத்தில் எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது நீண்ட கால தொடர்கதைதான் என்பது சமீபத்தில் வெளியான ஆய்வு உறுதிசெய்துள்ளது. அந்த ஆய்வின் படி, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, தமிழகத்தில் 166 காவலர்கள் தற்கொலை செய்து உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் சொந்தப்பிரச்னை, பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close