Published : 22,Apr 2018 02:29 AM

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வடமாநில இளைஞர் வெறிச்செயல்

5yr-old-girl-Raped-in-Thiruvallur

திருவள்ளூரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை போராக்ஸ் பகுதியில் வசிக்கும் சிறுமி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் தனியாக இருப்பதை பார்த்த பீகாரை சேர்ந்த பரவத் சிங் அங்கிருந்து தூக்கி சென்றுள்ளார். அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்து ஓடி வந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த கிராம மக்கள் அந்த வடமாநில இளைஞரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைதான பரவத் சிங்கை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்