[X] Close

சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி

The-proposal-demanded-death-penalty-to-those-raping-a-child-of-below-12-years-of-rape

 


Advertisement

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படும் கொடூர சம்பவம் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


Advertisement

இது தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து குழந்தைகளை பாலினக் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு, குழந்தைகள் பாலினக் கொடுமை (போக்சோ) சட்டத்தில் மரண தண்டனை கொண்டு வரப்படும் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி மோசமான பாலியல் தாக்குதலுக்கு அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் ஷரத்தே உள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close