தானே புயலைப்போல் புனேவில் மையம் கொண்ட என் தமிழ் ரத்தங்களே நமது வெற்றியை கொண்டாடுங்கள் என ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார்.
11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. 2வருட தடைக்கு பின்னர் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல்வேறு மாற்றங்கள். இந்த மாற்றங்களில் ஒன்று தான் ஹர்பஜன் சிங்கும், இம்ராம் தாஹிரும். இந்த சீசனில் இந்த இரு சுழல் புலிகள் சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பொதுவாகவே சென்னை அணி என்றால் ஒரு கிளாஸ் ஆன ஆட்டம். மைதானத்தில் கண்ணியத்தை கடைபிடித்தல். சின்ன சின்ன நகைச்சுவை என ஒரு பக்கா கலவையாக வலம் வரும் அணி. ஆனால் இம்ரான் தாஹிரோ விக்கெட் எடுத்தா பெவிலியன் வரைக்கு கத்திக்கிட்டே ஓடுற ரகம். ஹர்பஜன் சிங்குக்கு கையும், வாயும் கொஞ்சம் நீளம் அடுக்கடி வம்பு வழக்குகளில் சிக்குவது சிங்குக்கு வாடிக்கை. சரி இவங்க இப்ப என்ன பண்ணுணாங்கன்னு கேட்கறீங்களா.
சென்னை அணிக்கு தேர்வானதுல இருந்து இவங்க ரெண்டு பேரும் தமிழில் ட்வீட் போட்டு தள்ளுறாங்க. வெளிநாட்டுக்காரரான இம்ரான் தாஹிர் தங்கிலீஷ்லயும். நம்ம ஹர்பஜன் தமிழிலும் ட்வீட் செய்து வர்றாங்க. இதுல ஹர்பஜனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு. ஒவ்வோரு மேட்ச் முடிஞ்சதும் நம்ம சிங் இன்னைக்கு என்ன ட்வீட் போட்டு இருக்கார்னு பார்க்க ஒரு கூட்டமே காத்திருக்கு. காவிரி பிரச்னை காரணமாகவும் தமிழ்நாட்டுல நடைப்பெற்ற போராட்டம் காரணமாகவும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்துல நடக்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று புனேவில் நடைப்பெற்றது. இந்தப்போட்டியில் வாட்சன் அதிரடி சதத்தால் சென்னை அணி 204 ரன்கள் குவித்தது.பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்கு ஆல்வுட் ஆனது. இதன்மூலம் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டி புனேவில் நடைப்பெற்றாலும் அரங்கம் முழுவதும் சென்னை ரசிகர்களே குவிந்திருந்தனர். மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமே ஆக்கரமித்து இருந்தது.
சரி இப்ப நம்ம ஹர்பஜன் போட்ட ட்வீட்டுக்கு வருவோம் "யாதும் ஊரே யாவரும் கேளீரென்ற" வரிக்கேற்ப, தானே புயலைப்போல் புனேவில் மையம் கொண்ட என் தமிழ் ரத்தங்களே , கண்டங்கள் கடந்து தனக்கான இடமடையும் சிறகுகளைப் போல, உங்களின் அன்பு கண்டு மொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சில்லாய்த்தது. நமது வெற்றியை கொண்டாடுங்கள்.சிங்க பாய்ச்சல்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இம்ரான் தாஹிர் தனது ட்விட்டரில், “நெனச்சா அள்ளிக்கிட்டு வர்றதுக்கு மண்ணு நினைச்சியா மலை டா அண்ணாமலை. எடுடா வண்டிய போடுடா விசில” என பதிவிட்டுள்ளார்.
Loading More post
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!