[X] Close

நிர்மலாதேவி விவகாரத்தில் பல கட்சிக்கு தொடர்பு: பொன்.ராதாகிருஷ்ணன்‌

Professor-Nirmala-Devi-Case-issue--Pon-Radhakrishnan-Comment

தூய்மையும், நேர்மையும் நிறைந்த தமிழக ஆளுந‌ரை கொச்சைப்படுத்த தமிழகத்தில் சதி நடப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன்‌ குற்றஞ்சாட்டியுள்ளார். 


Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப்பிரிவு பேராசிரியராக பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன்மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளை தூண்டியதாகவும் நிர்மலாதேவி மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழி நடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே, ஆளுநர் அமைத்த விசாரணைக் குழு அதிகாரியான ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
 பல தலைவர்களும் ஆளுனர் மீது சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  பொன்.ராதாகிருஷ்ணன், தூய்மையும், நேர்மையும் நிறைந்த தமிழக ஆளுந‌ரை கொச்சைப்படுத்த தமிழகத்தில் சதி நடப்பதாக  குற்றஞ்சாட்டியுள்ளார். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணையை திசை திருப்புவதற்காகவே ஆளுநர் மீது பழி சுமத்தப்படுவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன்‌ தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close