[X] Close

‘கதவைத்திறங்கள்... கதறி அழுத பேத்தி’ - இரக்கமற்ற கொடூர தாத்தா கைது!

Meghalaya-Man-Arrested-For-Sexually-Assaulting-7-Year-Old-Granddaughter

7 வயது சிறுமியை இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்த சொந்த தாத்தா கைது செய்யப்பட்டார்.


Advertisement

மேகாலய மாநிலம் வடகரோ மலையை சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர் டேனி மார்க். இவரின் மகனுக்கு திருமணமாகி 7 வயது பெண் குழந்தை உள்ளது. தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, டேனியின் மகன் குடும்பத்தினர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனியாக வீடு எடுத்துச்சென்றுவிட்டனர். வீடு மாறினாலும், அவர்களின் 7 வயது சிறுமி முன்பிருந்த வீட்டுப்பகுதியிலேயே டியூஷன் படித்து வந்துள்ளார். டியூஷனுக்கு வரும் சிறுமி தனது புத்தங்களை எடுத்துச் செல்வதற்கு சிரமமாக இருக்கும் நேரத்தில், தனது தாத்தா வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிடுவார். அத்துடன் தாத்தாவையும் அன்புடன் வந்து பார்த்துச் செல்வார்.


Advertisement

இந்த நிலையில் டியூஷன் செல்வதற்காக தாத்தா வீட்டில் இருந்த புத்தகங்களை எடுத்துச்செல்ல வந்துள்ளார் சிறுமி. மதியம் மூன்று மணியளவில் வந்த சிறுமியை தாத்தா வரவேற்றுள்ளார். வீட்டிற்குள் வந்து சிறுமி புத்தகங்களை எடுத்துக்கொண்டு திரும்பிய போது,கதவை அடைத்துள்ளார் அந்தக் கொடூரத் தாத்தா. சிறுமி டியூஷன் போக வேண்டும், தாத்தா கதவைத் திறங்கள் என்று மழலைக்குரலில் கூறியுள்ளது. அதைக்கேட்டும் இரக்கமில்லாத அந்த தாத்தா, தனது பேத்தி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கதறி அழுதும் இரக்கம் வரவில்லை. 

இதையடுத்து வீடு சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூற, அவர்கள் புரிந்துகொண்டனர். அத்துடன் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்துகொண்டனர். இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கொடூரத் தாத்தா கைது செய்யப்பட்டார். அவர் மீது குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close