[X] Close

விசிக பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை

Petrol-Bomb-blast-on-VCK-cadre-office

சென்னை அடுத்த அம்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சென்னை திருநின்றவூர் சேக்காடு அண்ணாநகரில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் என்கிற கதிர்நிலவன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிசெயலாளராகவும் உள்ளார். இவரது அலுவலகம் அம்பத்தூர் காவல் நிலையம் அருகே காமராஜபுரம் ஜெ.ஜெ.தெருவில் உள்ளது. கடந்த இரண்டு வருடமாக இந்த அலுவலகம் இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது.

நேற்று வன்கொடுமை தடுப்பு சட்டத்திருத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் சுமார் 4.00 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் ரவிச்சந்திரன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. திடீரென கேட்ட சத்தத்தினால் அலுவலத்தின் உள்ளே பணியாற்றி வரும் உதவியாளர் அழகு என்பவர் வெளியே வந்த பார்த்தபோது, பாட்டில் அலுவலக கதவில் இருந்த கண்ணாடியில் உள்ள அம்பேத்கர் படத்தில் பட்டு சிதறி கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் அளித்த தகவலின் படி அம்பத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close