Published : 15,Apr 2018 03:00 AM

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா

the-first-Indian-player-to-win-Singles-Gold

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின், கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இங்கு இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து முன்னேறினர். இரு இந்திய வீராங்கணைகள் இறுதிபோட்டிக்கு முன்னேறியதால் இரண்டு பதக்கங்கள் உறுதியானது. இதனையடுத்து இன்று நடைப்பெற்ற போட்டியில் சிந்துவும் -சாய்னாவும் மோதினர். இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டி கடும் சவாலாக காணப்பட்டது. 

முதல் செட்டை சாய்னா நேவால் 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சிந்து கடும் நெருக்கடி கொடுத்தார். இருப்பினும் சாய்னா 23-21 என்ற கணக்கில் கைப்பற்றி நேர்செட்டில் வெற்றி பெற்றார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சாய்னாவுக்கு தங்கப்பதக்கமும், சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.

இதற்கு முன்பு டெல்லியில் 2010 ஆம் ஆண்டு நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டியில் சாய்னா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை இரு முறை தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 21வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26தங்கம், 18வெள்ளி, 20 வெண்கலப்பதக்கத்துடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்