Published : 14,Apr 2018 03:25 PM

உலக நாகரிகத்திற்கு வித்திட்டதே தமிழ்தான்: ஹர்பஜன்சிங் வாழ்த்து

Harbhajan-tamil-new-year-wishes

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்  தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தொடர்ந்து  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு வருகிறார். இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவரே தமிழில் பேசும் வீடியோ ஒன்றையும் பதிவேற்றி இருக்கிறார். அதில்,“தமிழா இது உன்னுடைய புத்தாண்டு. சோகங்கள், துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதியப் பாதை பிறக்கும். புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும். உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துகள்”எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சக வீரரும் தென்னாப்பிரிக்க சுழல் பந்து வீச்சாளருமான இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்