[X] Close

ஆசிஃபா கொலை வழக்கு: அழிக்கப்பட்ட ஆதாரங்களும், தோண்டியெடுத்த விசாரணையும்!

Dedicated-police-team-resisted-odds-to-crack-Kathua-rape-case

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆசிஃபாவின் கொலை வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது எப்படி என கதுவா மாவட்ட எஸ்.பி ரமேஷ் குமார் ஜல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா ஜனவரி 10ஆம் தேதி குதிரையை தேடிச்சென்ற போது காணாமல் போனார். சிறுமியின் தந்தை யூசஃப், ஹீரா நகர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். சிறுமி யாருடனாவது சென்றிருப்பார் என காவல்துறை கூறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஆசிஃபா, ரஸன்னா வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். 


Advertisement

இதையடுத்து வழக்கை மாநிலக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பிரிவு உயர் எஸ்.பி. ரமேஷ் குமார் ஜல்லா தலைமையிலான குழு தங்கள் அதிரடி விசாரணையை தொடங்கினர். விசாரணை தொடங்கிய சில நாட்களில் பாஜக அமைச்சர்கள் செளத்ரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் தலைமையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் விசாரணையை மேற்கொள்ளும் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இருப்பினும் எதிர்ப்புகளை மீறி சாதுர்யமாக செயல்பட்ட காவல்துறையினர், ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர். தொடக்கத்தில் எந்த வித ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு முன்னர் வழக்கை விசாரித்த போலீஸாரின் தகவல்கள் படி பர்வேஷ் குமார் என்ற 15 வயது சிறுவன் குற்றம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த சிறுவனிடம் விசாரித்ததில், சிறுவனும் அதையே கூறியுள்ளான். இதையடுத்து ஆசிஃபா உடலை மீட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விசாரணைக்குழு பார்த்துள்ளது. ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டும், ஆசிஃபாவின் உடையில் சேறு இருப்பது தெரிந்துள்ளது. ஆனால் வேறு எந்த புகைப்படங்களிலும் சேறு இல்லை. இதை கவனத்தில் கொண்டு அதன் அடிப்படையில் விசாரித்த குழுவிற்கு, அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்ததுள்ளது. சிறுமியை கோவிலில் அடைத்து வைத்து பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.


Advertisement

சஞ்சி ராம் என்ற ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி, இந்தக் குற்றச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார். சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த கோயிலை இவர்தான் நிர்வகித்து வந்துள்ளார். பர்வேஷ் குமார் என்ற 15 வயது சிறுவன், சஞ்சி ராமின் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தியுள்ளான். இவன் தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். சிறுமியைக் கடத்துவதற்கு உதவிபுரிந்துள்ளான்.

விஷால் என்ற கல்லூரி மாணவன் சஞ்சி ராமின் மகன். மீரட்டில் உள்ள கல்லூரியில் படித்து வரும் இவனை, பர்வேஷ் குமார் தொலைபேசி மூலம் அழைத்து சிறுமிகடத்தப்பட்டதாகவும் , பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசை இருந்தால் வருமாறும் அழைத்துள்ளான். இதனையடுத்து அவனும் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளான். இந்த சம்பவத்தை அறிந்த தீபக் காஜுரியா என்ற சிறப்பு காவல்துறை அதிகாரி, ஆசிஃபாவை கொலை செய்யும் முன் தடுத்து, மயக்க நிலையில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அதுமட்டுமின்றி சுரிந்தர் குமார் என்ற சிறப்பு காவல்துறை அதிகாரியும், தீபக்கின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார். மேலும் ஆனந்த் தத்தா என்ற துணை காவல் ஆய்வாளர், இந்தச் சம்பவத்தை விசாரிக்க சென்றுள்ளார். முழு சம்பவமும் எப்படி நடந்தது என அறிந்தும், பணத்திற்காக எதையும் செய்யாமல் குற்றத்தை மறைக்க முயற்சித்துள்ளார். இவர்களுக்கெல்லாம் மேல் திலக் ராஜ் என்ற தலைமை காவலர், இந்தச் சம்பவத்தை விசாரிக்க சென்றுள்ளார். அவரும் சஞ்சி ராமுக்கும், ஆனந்த் தத்தாவுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு, ரூ.3 லட்சம் வரை பணம் பெற்று,  குற்றத்தை மறைத்துள்ளார். 

இந்த சம்பவங்கள் அனைத்தையும் ரமேஸ் குமார் ஜல்லா விசாரணைக்கு குழு தோண்டி எடுத்துள்ளது. விசாரணை தொடர்பாக ரமேஸ் குமார் கூறும் போது, தங்களுக்கு அரசியல் ரீதியாக எந்தவித எதிர்ப்புகளும் விசாரிப்பதில் இல்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கில் தொடர்புடைய 8 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் செய்த குற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்து அறிக்கையாக தாக்கல் செய்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close