[X] Close

அரசியலுக்கு வருகிறாரா விஜய்..? :எஸ்.ஏ.சி. பதில்

Vijay-comes-to-politics--

விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு  அவருடைய அப்பா சந்திரசேகர் பதில் கொடுத்துள்ளார்.


Advertisement

கமல், ரஜினி அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் விஜய்யும் அரசியலுக்கு வருவார் என்ற கருத்து பரவி வந்தது. இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி,  அரசியலுக்கு கமல், ரஜினி வருவதற்கு முன்பு விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும், அரசியலில் மாற்றங்கள் என்பது வந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவர் தன் விருப்பதையும் வெளிபடுத்தி உள்ளார். மேலும் விஜய் ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் அந்தந்த தொகுதியில்  மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று தான் அவர்களிடம் கூறி இருப்பதாகவும், ஒரு வேளை விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் என்ற பின்புலம் மட்டும் இல்லாமல் அவர்கள் அந்தத் தொகுதியில் செய்துள்ள நல்ல காரியங்களை முன் வைத்து அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று பேசியுள்ளார்.  


Advertisement

Advertisement
[X] Close