Published : 12,Mar 2017 08:53 AM

ஓபிஎஸ் அணி ஆட்சி மன்றக் குழு தலைவரானார் மதுசூதனன்

Mathusuthanan-appointed-new-officers

மதுசூதனன் தலைமையில் 13 பேர் கொண்ட புதிய ஆட்சிமன்றக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், அதிமுக சட்டவிதிகளின்படி ஆட்சிமன்றக் குழுவை நியமிக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது பொதுச்செயலாளர் பதவி காலியாக இருப்பதாகவும், அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தாமே புதிய ஆட்சி மன்ற‌க்குழு உறுப்பினர்களை நியமித்திருப்பதாகவும் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்ட 13 பேர் கொண்டு குழு இன்று முதல் கட்சி நிர்வாகத்தைக் கவனிக்கும் என மதுசூதனன் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்