[X] Close

நடிகர் அர்ஜூன் மருமகனுடன் நடிகை மேக்னா ராஜ் திருமணம்

Meghana-Raj-and-Chiranjeevi-Sarja-set-to-wed-on-May-2

நடிகை மேக்னா ராஜ்- சிரஞ்சீவி சார்ஜா திருமணம் மே மாதம் 2-ம் தேதி நடக்கிறது.


Advertisement

தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மேக்னா ராஜ். இவர், ’தப்புத்தாளங்கள்’ சுந்தர் ராஜ், ’வைதேகி காத்திருந்தாள்’ பிரமிளா ஆகியோரின் மகள். தமிழை விட மலையாளம், மற்றும் கன்னட படங்களில் அதிகமாக நடித்து வரும் இவர், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர், கன்னட ஹீரோ சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து வந்தார். 


Advertisement

இதையடுத்து கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இப்போது திருமணத் தேதியை அறிவித்துள்ளனர். மே மாதம் 2-ம் தேதி பெங்களூர் பேலஸ் மைதானத்தில் இவர்கள் திருமணம் நடக்கிறது. இதில் திரைத்துறையினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். 
சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜூனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close