போரூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் தூக்குதண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சென்னை குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூரை சேர்ந்த சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பின் தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.போரூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் ஆள்கடத்தல், பாலியல் கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.இதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சான்று பொருட்கள் பறிமுதல் செய்ததில் விதிமீறல், முன்னுக்கு பின் முரணாக சாட்சியம் அளித்தனர் என அதில் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் 4வாரத்தில் மாங்காடு காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்