[X] Close

சல்மான் விடுதலை: சோயிப் அக்தர் உருக்கமான பதிவு

After-Shahid-Afridi-Shoaib-Akthar-tweets-on-Kashmir-wants-it-to-be-free-like-Salman-Khan

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.


Advertisement

சல்மான் கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது தனது வருத்தத்தை அக்தர் தெரிவித்து இருந்தார். “என்னுடைய நண்பர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால், இந்திய நீதிமன்றத்தின் உத்தரவை நாம் மதிக்க வேண்டும். ஆனால், தற்போது இந்தத் தண்டனை மிகவும் அதிகமானது என்றே நான் கருதுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய வருத்தங்களை தெரிவிக்கிறேன். நிச்சயம் அவர் விரைவில் வெளியே வருவார்” என்று அக்தர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சல்மான் கான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சல்மான் விடுதலை குறித்து அக்தர், “இறுதியாக மாண்புமிக்க நீதிமன்றம் சல்மானை ஜாமினில் விடுதலை செய்துள்ளது. காஷ்மீர், பாலஸ்தீனம், ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுவதும் பதட்டம் நிலவி வரும் பகுதிகள் விடுதலை ஆகும். ஏனெனில் மனிதநேயத்திற்காகவும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்காகவும் என்னுடைய இதயத்தில் ரத்தம் வழிகிறது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

அதேபோல், மற்றொரு பதிவில், “இரண்டு நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவுக்காக நிற்க வேண்டும். 70 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னைகள் ஏன் தீர்க்க முடியவில்லை என்று அதிகாரிகளை கேளுங்கள். இதே வெறுப்புடன் மேலும் 70 ஆண்டுகள் வாழ விரும்புகிறீர்களா என கேட்கிறேன்” என்று அக்தர் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வீரர் சையித் அப்ஃரிதி நேற்று கருத்து தெரிவித்து இருந்தார். ஐக்கிய நாடுகள் சபை காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அப்ஃரிதியை தொடர்ந்து தற்போது அக்தர் காஷ்மீர் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close