[X] Close

ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கியது 

Stalin-Cauvery--rescue-mission-started

காவிரி உரிமை மீட்பு பயணத்தை அறிவிக்கும் கொடியை ஏற்றி வைத்து நடைப் பயணத்தை ஸ்டாலின் தொடங்கினார். 


Advertisement

திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டணி கூட்டத்திற்கு பிறகு பேசிய ஸ்டாலின் திமுக சார்பில் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். அதன்படி இன்று  திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தைத் தொடங்கினார். முன்னதாக கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசிய நிலையில் இறுதியாக பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கர்நாடக அரசு தெரிவிக்கிறது. ஆனால் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டிக்கிற துணிவு கூட தமிழக அரசுக்கு இல்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி பிரச்னையில் ஆளும் கட்சியுடன் எந்தக் கவுரவமும் நாங்கள் பார்க்கவில்லை என்றார். காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி  தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் நாங்கள் போராட்டங்களை நடத்தி வருவதாகவும், வரும் 9ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்து 2வது கட்ட நடை பயணம் தொடங்கும் என்றார் 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close