[X] Close

காவிரிக்காக ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டாம்: அமைச்சர் ஜெயக்குமார்

Minister-Jayakumar-requested-fans-to-boycott-IPL

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டாம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்துவது பற்றி கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும்; நடைபயணம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு யாரும் இடையூறு செய்ய வேண்டாம்” என்று கூறினார். மேலும், ‘‘துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் முடிவில் மாநில அரசு தலையிட முடியாது; துணைவேந்தர் நியமனம் முழுக்க முழுக்க ஆளுநருடன் தொடர்புடையது’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழக அரசின் நடவடிக்கைகள் ஓயாது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மேலும், ‘‘போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது; ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டங்கள் இருக்க வேண்டும்’’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close