உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார் என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச் சாளர் ஷேன் பாண்ட் சொன்னார்.
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் மும்பையின் பும்ரா, பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என்று எதிர்பார் க்கப்படுகிறது. குறிப்பாக முதல் மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்துவதில் பும்ரா வல்லவர். இந்நிலையில், குறுகிய ஓவர் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் பும்ராதான் என்று மும்பை அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஷேன் பாண்ட் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘குறைந்த ஓவர் போட்டிகளில் பும்ரா சிறந்தவர். நம்பர் ஒன் வீரர் அவர்தான். ஒவ்வொரு அணியும் போட்டியின் கடைசி கட்ட ஓவர்களில் சில பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும். அதில் சிறந்த வீரர் பும்ராதான். அவரை விட வேறு யாரும் இல்லை. கடந்த மூன்று வருடங்களில் அவர் சிறந்த பந்துவீச்சாளராக உருவாகி இருக்கிறார். டெஸ்ட் போட்டி யிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்’ என்றார்.
பும்ரா கூறும்போது, ‘எனக்கு என்ன வேலை கொடுக்கப்படுகிறதோ, அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். பந்துவீச்சைப் பொறுத்தவரை மும்பை அணி, ஒரு வீரரை மட்டுமே நம்பி இல்லை. அனைவரும் அவரவர் பங்கை சரியாகச் செய்வோம் என நினைக்கிறேன்’ என்றார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்