[X] Close

ஐபிஎல்லில் இருந்து திடீரென விலகிய முக்கிய வீரர்கள்: ரசிகர்கள் அப்செட் 

Suddenly-the-main-players-out--this-IPL

நாளை மாலை வான்கடே மைதானம் உற்சாக உறுமியை வாசிக்கப் போகிறது. அதற்கான மகிழ்ச்சியில் இப்போதே ஐ.பி.எல் ரசிகர்கள் மிதக்க தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க விழாவில் ரித்திக் ரோஷன்(?) உட்பட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் ரகளை ஆட்டம் போடப் போகிறார்கள். வானம் வேட்டு வெளிச்சத்தில் பொங்கப் போகிறது. அதன் பின் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ரோகித் தலைமைலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டோனி தலைமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்க் கொள்ளப் போகிறது. இந்த ஐபிஎல் பொருத்தவரை இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளனர். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு இம்முறை அனைத்து அணி கேப்டன்களும் இந்தியராக இருக்கப் போகிறார்கள் என்ற ஆசை கடைசி நேரத்தில் கை நழுவிப்போனது.கடைசி நேரத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வில்லியம்சனை அறிவித்தது நிர்வாகம். ஐபிஎல் 11-வது சீசனில் அதிக விலைக்கு எடுக்கபட்ட பல வெளிநாட்டு வீரர்கள் காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் அணியில் இருந்து விலகி உள்ளனர். அவர்கள் யார் யார்? 

டேவிட் வார்னர்:

                                         


Advertisement

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த சில சீசனாகளாகவே அந்த அணியின் தூணாக விளங்கியவர் டேவிட் வார்னர். தொடக்க வீரராகக் களம் காணும் இவர் எதிர் அணியின் பந்து வீச்சை தன் அதிரடியால் மிரட்டுபவர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கபட்டுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாத நிலை உண்டாகியது. இதல் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். எனினும் டேவிட் வார்னர் போல முக்கிய வீரகள் விளையாடத நிலையில் அந்த இடத்திற்கு மாற்று வீரராக யார் சேர்க்கபடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில் இங்கிலாந்தின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இறுதிவரை விலைபோகாத இவர், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மிட்ச்செல் ஸ்டார்க்:

                                                                

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில், வலது முழங்காலின் கீழ்ப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஸ்டார்க் ஆடவில்லை. இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் விலகி இருந்தார். சென்ற முறை பெங்களூர் அணிக்காக விளையாடிய இவரை இம்முறை ரூ.9.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவருக்கு மாற்றாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டாம் குர்ரானை 1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா.பேட்டிங்கிலும் கை கொடுக்க கூடிய இவர் யார்க்கர் பந்துகளை சிறப்பாக விசுகிறார்.

ஸ்டீவ் ஸ்மித்:

இரண்டு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கபட்டு இருந்தவர் ஸ்மித். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் அஸி.கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யபட்டுள்ள ஸ்மித், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் விளையடுவார்கள் என அணி நிர்வாகம் தெரிவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஸ்மித் விளையாட இருந்த, இடத்திற்கு மாற்று வீரர்களை தேடி வந்தது. இந்த நிலையில் இந்தியா உடன் நடந்த தொடரில் அதிரடியில் கலக்கிய தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளாசன், ஸ்மித்க்கு பதிலாக ராஜஸ்தான் அணிக்கு சேர்க்கப்பட்டார். டி20 கிரிக்கெட்டில் 146 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கும் கிளாஸனை, அவரது அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது ராஜஸ்தான். 

நாதன் கூல்டர்நைல்:

                                                         

கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவர் முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். 2.2 கோடி ரூபாய்க்கு நாதன் கூல்டர்நைலை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கி இருந்தது. இவருக்கான மாற்று வீரராக, நியூசிலாந்தைச் சேர்ந்த கோரி ஆண்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேரடியான ஏலத்தில் விலைபோகாத அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்

ஜேசன் பெஹரன்டார்ஃப்:

இவரது பெயரை அதிகம் கேட்டு இருக்க வாய்ப்பு இல்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹரன்டார்ஃபை, மும்பை அணி1.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. இந்நிலையில் முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தினால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கான மாற்று வீரராக, நியூசிலாந்தைச் சேர்ந்த மிட்செல் மெக்லீனகனைத் தேர்ந்தெடுத்துள்ளது. நேரடி ஏலத்தில் விலை போகாத இவரை 1 கோடிக்கு ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். இவர் கடந்த சில சீசனகவே மும்பை அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிட்டதக்கது.

சுனில் நரேன்- மிட்செல் சான்ட்னர்- ரபாடா

                             

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் விளையாட இருந்தார். அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு அவரை வாங்கியிருந்தது. ஆனால், காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பந்தை எறிவதாக கொல்கத்தாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் மீது அம்பயர்கள் புகார் கூற  இந்த ஐபிஎல்லில் அவர் விளையாடுவார என்பது கேள்வி குறியாக உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்டின்போது முதுகு வலியால் அவதிப்பட்ட ரபாடா சுமார் மூன்று மாதம் கிரிக்கெட்டில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4.2 கோடி ரூபாய் கொடுத்து ரபாடாவை ஏலம் எடுத்தது இருந்தது. தற்போது முதுகுவலியால் மூன்று மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் அவரும் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இவர்களுக்கு எல்லாம் முன்பாகவே ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின் கொல்கத்தா அணியிலிருந்து காயத்தால் விலகியது குறிப்பிடதக்கது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close