Published : 04,Apr 2018 03:43 PM
தனுஷூடன் இணைகிறேன்: அனிருத் ஹேப்பி

அடுத்த ஆண்டு தனுஷுடன் பணியாற்றுவேன் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
‘3’படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அவரது சினிமா அறிமுகம் தனுஷ் கையால் நடைப்பெற்றது. அந்தப் படத்தில் ‘கொலவெறி’ பாடல் மூலம் இருவரும் உலக அளவில் புகழ் பெற்றிருந்தனர். யூடியூப் வரலாற்றில் பெரிய சாதனை எட்டியது இந்தப் பாடல். அதன் பிறகு தனுஷ் உடன் அனிருத் இசையமைத்த ‘வேலையில்லா பட்டதாரி’, மாரி’ போன்ற படங்கள் இசை ரீதியாக வெற்றி பெற்றன.
ஆனால் சில வருடங்களாகவே அனிருத் தன் படத்திற்கு இசையமைப்பதை தனுஷ் தவிர்த்து வந்தார். அதற்காக அவர் பல காரணங்களை முன் வைத்தார். இந்த இருவரின் பிரிவுக்கு சிவகார்த்திகேயனே காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் இணைந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உடனே இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற போவதாக செய்தி வெளியானது. அதை அடுத்து அனிருத், “தனுஷூடன் மறுபடியும் சேர்ந்து பணியாற்ற போகிறேன். இது அடுத்த வருடம் நடக்கும்” என கூறியுள்ளார்.
இதனால் சில வருடங்களாக நிலவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அனிருத்.