Published : 30,Mar 2018 08:12 AM

மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை என்பது பொய்: முதலமைச்சர் பழனிசாமி

TN-chief-minister-Edappadi-palaniswamy-comments-on-cauvery-issue

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிமுக அரசு அழுத்தம் தரவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் 120 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், காவிரி பிரச்னையில் தமிழக உரிமையை பாதுகாக்க அதிமுக அரசு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அதிமுக அரசின் சட்ட நடவடிக்கையினாலேயே நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானதாக கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் 17 நாட்களாக நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 2007ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் கூட்டணி வைத்திருந்த திமுக, நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்