[X] Close

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக் கொலை 

salem-near-bsc-student--was-killed

சேலம் மாவட்டம் மேட்டூரில் பட்டதாரி இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யபட்டுள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பை உண்டாகியுள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள  குள்ள வீரன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் ஒரு பி.எஸ்.சி., பட்டதாரி. இன்று காலை வழக்கம் போல் வெளியே சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் இருவர் வழிமறித்துள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத கண்ணன் நிலைகுலைந்து போனார். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய கண்ணனை தொடர்ந்து வந்து அந்த இருவரும் ஓடவோட விரட்டி உள்ளனர்.  இறுதில் அவர்கள் கொண்டுவந்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கண்ணனை வெட்டியுள்ளனர். இதனால் இரத்த வெள்ளத்தில் மிதந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பட்டப்பகலில் நடந்துள்ள இந்தக் கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 


Advertisement

Advertisement
[X] Close