[X] Close

நாங்கள்லாம் ஒரே குடும்பம்: ’சிஎஸ்கே’ பிராவோ மகிழ்ச்சி

CSK-not-a-team--it-s-a-family--bravo

’சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) என்பது ஓர் அணியல்ல, அது ஒரு குடும்பம்’ என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ சொன்னார்.


Advertisement

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் வந்திருப்பது, சொந்த ஊருக்கு வந்திருப்பது போல இருக்கிறது. கடந்த 2 வருடமாக சிஎஸ்கே அணியில் ஆட முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. ஐ.பி.எல். ஏலத்தின்போது நான் ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் போட்டியில் விளையாடி கொண்டிருந்தேன். சென்னை அணி, என்னை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருந்தேன். அது நடந்து விட்டது. 


Advertisement

சிஎஸ்கே என்பது ஓர் அணியல்ல, அது ஒரு குடும்பம். அணியில் விளையாடவில்லை என்றாலும், ஒவ்வொரு வீரரும் தொடர்பில்தான் இருக்கிறோம். அணி நிர்வாகமும் தொடர்பில் இருக்கிறது. அதோடு, எனக்கு ஏராளமான இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சென்னை ரசிகர்கள். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எனக்கு ஸ்பெஷல் டீம். உலகின் சிறந்த கேப்டனின் (தோனி) தலைமையின் கீழ் செயல்படும் அணி இது. தோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாடுவது ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஒன்றுதான்.

ஐபிஎல் போட்டியில், ஏராளமான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடுகிறார்கள். அனைவரும் ஒரே ஸ்பிரிட்டில் ஆட்டத் தைப் பார்க்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றிருக்கிறது. வீரர்கள் அனைவருக்கும் வாழ்த் துகள். வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நினைத்து பார்க்கவே முடியாது. உலகக் கோப்பை போட்டியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிராவோ கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close