கடந்த 2010ம் ஆண்டு தான் ஆண்மையற்றவர் என நித்யானந்தா கூறிய நிலையில், தனக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த பெண்ணுடன் அவர் ஒப்புதலின்பேரிலேயே பாலியல் உறவு வைத்ததாகவும், எனவே அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது எனவும் தற்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் அவரின் சீடையாக இருந்த பெண் ஒருவர் கடந்த 2010ம் ஆண்டு அவர் மீது பாலியல் புகார் கொடுத்தார். நித்யானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியிருந்தார். புகார் வெளியான சமயமான கடந்த 2010ம் ஆண்டு குற்றவியல் புலானய்வு துறையில் ஆஜரான நித்யானந்தா, தான் ஆண்மையற்றவர் என கூறினார். பல சட்ட போராட்டத்திற்கு பின் நித்யானந்தாவிற்கு பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்தவமனையில் கடந்த 2014ம் ஆண்டு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவில் நித்யானந்தா ஆண்மை உள்ளவர் என்றும், அவருக்கு பாலியல் நோய் எதுவும் இல்லை என்றும் ராமநகரா அமர்வு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நித்யானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய ராமநகரா அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நித்யானந்தா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அப்போது நித்யானந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ பாலியல் குற்றச்சாட்டு சொல்லும் பெண் அவரிடன் விருப்பத்துடன்தான் நித்யானந்தா உடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். எனவே அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது. மேலும் அப்பெண் ஏற்கனவே பல ஆண்களுடன் தொடர்பு வைத்தவர். அவருக்கு பாலியல் சம்பந்தமான நோயும் உள்ளது. நித்யானந்தாவிடம் இருந்து பயன்களை பெற அவரிடம் தொடர்ச்சியாக அப்பெண் பாலியல் உறவு வைத்திருந்தார்” என தெரிவித்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபரின் வழக்கறிஞர் அஷ்வின் வைஷ் கூறும்போது, “ நித்யானந்தா தொடர்ச்சியாக முரண்பட்ட கருத்தை தெரிவித்து வருகிறார். முதலில் அவர் ஆண்மையற்றவர் எனக் கூறினார். ஆனால் சோதனை ஆண்மையுள்ளவர் எனக் கூறுகிறது. தொடர்ச்சியாக அவர் கருத்தை மாற்றி மாற்றி கூறிவருகிறார். நித்யானந்தா தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால்தான் உண்மை நிலை தெரியவரும்” என்றார்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்