[X] Close

காவிரி விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Immediate-action-Needed-in-Cauvery-case-TN-CM-Palanisamy-letter-to-PM

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். 


Advertisement

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை இணைத்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக தெரிவித்திருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் சென்னை வந்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தான் கோரிக்கை விடுத்ததையும் முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

6 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வெளியாகி 4 வாரங்கள் கடந்தும் மத்திய அரசு தரப்பில் சாதகமான நடவடிக்கைகள் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆகையால், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் உத்தரவிடவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமரின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close