Published : 08,Mar 2018 06:43 AM

அரசு ஊழியர்களுக்கிடையே கைக்கலப்பு: வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

Government-Employes-Beating-Eachother-in-Pallavaram

பட்டா வழங்க மறுத்த பல்லாவரம் வட்டாட்சியரை மற்றொரு வட்டாட்சியர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரம் வட்டாட்சியர்  வெல்ப்ரேட் என்பவர் வழக்கம்போல் இன்று காலை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த சென்னையில் பணிபுரியும் வட்டாட்சியர் ஒருவர் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு பட்டா வழங்கும்படி கூறியுள்ளார். முறையாக மட்டுமே பட்டா வழங்க முடியும் மாறாக பட்டா வழங்கப்படாது என்று பல்லாவரம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பல்லாவரம் வட்டாட்சியரை அடித்துள்ளார். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைக்களப்பில் ஈடுபட்ட வட்டாட்சியரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியரும் விசாரிக்க உள்ளார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்