[X] Close

காவிரி விவகாரம்: 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

The-central-government-call-upon-to-cauvery-issue-of-the-states-

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


Advertisement

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தது. இதனிடையே, சமீபத்தில் தமிழகம் வந்திருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, “உச்சநீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது எளிதானது அல்ல. இது கடினமன செயலாகும்” என்று கூறியிருந்தார். நிதின் கட்காரியின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

நிதின் கட்காரியின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று சென்னை வந்திருந்த  மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம், காவிரி மேலாண்மை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்று கூறினார். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Advertisement

இந்நிலையில், மாநிலங்களவை இன்று கூடியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். மைத்ரேயன் தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் அவைத்தலைவர் இருக்கையை சூழ்ந்தனர். எம்.பிக்களின் தொடர் முழக்கம் காரணமாக அவை அமளி நிலவியது. திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி கனிமொழியும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கேள்வி எழுப்பினார். 

இத்தகையை நிலையில், நீர் வளத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து அடுத்தக்கட்ட ஆலோசனை மார்ச் 9 இல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close