[X] Close

ஆசிய போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!

Navjot-Kaur-wins-Asian-wrestling-gold--Sakshi-Malik-settles-for-bronze

கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்தப்போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜாத் கவுர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

கிர்கிஸ்தானில் ஆசிய மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 65 கிலோ பிரிவிலான மல்யுத்தப் போட்டியில் ஜாப்பன் நாட்டை சேர்ந்த மியா இமாயை வீழ்த்தி, இந்திய வீராங்கனை நவ்ஜாத் கவுர் தங்கப்பதக்கை வென்றுள்ளார். போட்டி தொடங்கிய 20 வினாடிகளில் நவ்ஜாத் 2 புள்ளிகளை பெற்று முன்னிலைக்கு வந்தார். இதனால் முதல் நேர இடைவெளியில் 5-0 என்ற கணக்கில் அவர் முன்னிலையில் இருந்தார். இதையடுத்து ஆட்டத்தின் இறுதி 50 வினாடிகளில் எதிர் வீரர் காலில் தாக்க முயற்சித்தும், சாதுர்யமான திறமையை வெளிப்படுத்தி 9-1 என்ற கணக்கில் நவ்ஜாத் தங்கப் பதக்கத்தை வென்றார். 

முன்னதாக நடைபெற்ற 62 கிலோ பிரிவிலான மல்யுத்தப்போட்டியில் கஜகஸ்தானை சேர்ந்த அயாவுலிம் காஸ்ஸிமோவாவை வென்று இந்திய வீராங்கனை சக்ஸி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close