Published : 06,Mar 2017 09:43 AM
மும்பை தாக்குதல்: பாக். அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கத்தாலேயே நடத்தப்பட்டது என்று அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லியில் நடந்துவரும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலி துர்ரானி, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதுவுக்கு எந்த வசதியையும் செய்து தரக்கூடாது; அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார். மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கத்தாலேயே நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 166 இந்தியர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி வகித்த ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதுபோல பேசியிருப்பது இதுவே முதல்முறையாகும்.