ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலை இன்று திறக்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக
தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கலச் சிலை, எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். ஜெயலலிதாவின் சிலை திறப்பு நிகழ்வையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் ஏராளமான தொண்டர்கள் திறன்டிருந்தனர். ஜெயலலிதாவின் சிலையை திறக்கும்போது அலுவலகம் சூழ சாலையில் நின்றிருந்த தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டனர். அதிமுக சின்னமான இரட்டை இலையை போல விரல் காட்டும் ஜெயலலிதாவின் சிலையை கண்ட தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர்.
ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது அம்மா' நாளிதழும் தொடங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்ற. ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நேற்று மாலையில் இருந்து அதிமுக அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
பூந்தமல்லி: கழன்று தொங்கும் பேனர்கள்; விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!